Skip to main content

"தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன?"- உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

chennai high court tn govt schools play grounds details

 

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில், விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த பி.ஆர்.சுபாஷ் சந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். 

 

அந்த மனுவில், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர் என்பது குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க மறுத்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கை இன்று (08/08/2022) விசாரித்த முனீஸ்வரநாத் பண்டாரி அமர்வு, மாநிலம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன? என்பது குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 27- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்