Skip to main content

சென்னையை கலக்கும் 'நாட்டுப்புற விழா'

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

ஜனவரி 19, 20 தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியில் 'வீதி விருது விழா' என்ற நாட்டுப்புற கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சிகள் நாளை இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் மறைந்த கலைகளை தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் கலைஞர்கள் வந்து நிகழ்த்துகின்றனர். மொத்தமாக 100 வகை ஆட்டக்கலைகளும் 50 வகையான கூத்துக்கலைகளும் விடிய விடிய விழா நிகழ இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும், தலைவர்களும் நாட்டுப்புற கலைகள் மீட்டெடுப்பு பற்றியும் கலைகளில் கருத்துரிமை பற்றியும் பேச உள்ளனர். இன்று நடந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியில் முத்தரசன், சுப.வீரபாண்டியன், நாஞ்சில் சம்பத், திருமுருகன் காந்தி, சுந்தரவள்ளி, அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் குடும்பமாக வந்து கண்டு மகிழலாம் என இலயோலா மாணவர் அரவணைப்பு மையம் (LSSS), இலயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் (AMC) அழைப்பு விடுத்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்