Published on 13/06/2020 | Edited on 13/06/2020
![CHENNAI CORONAVIRUS ZONES MINISTER PANDIYARAJAN PRESS MEET](http://image.nakkheeran.in/cdn/farfuture/5RVY2KuGvZtVjv1I_WqcG-ydx-TfQSoBtuiHu9zRXLg/1592040688/sites/default/files/inline-images/pan2333_0.jpg)
சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் பாண்டியராஜன். அப்போது,
"தடுப்பைத் தாண்டி வெளியே சென்றதால் போலீசாரால் வழக்குப் பதியப்பட்டவர்கள் மீண்டும் வீட்டுத் தனிமையிலே இருப்பர். அதையும் மீறி பாதுகாப்பாக நடந்து கொள்ளாவிட்டால்தான் கரோனா சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்படுவர். வீட்டு முகாமை மீறியதாலே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு விரைவில் குறையும் என நம்புகிறேன்" என்றார்.