Published on 09/01/2019 | Edited on 09/01/2019

ஜனவரி 16, 21 தேதிகளில் மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 மற்றும் 21ம் தேதிகளில் சென்னையில் மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த இரு நாட்களும் விதிகளை மீறி மதுக்கடைகள் பார்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.