Skip to main content

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்