
சென்னையில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இதனைக் கட்டுபடுத்த காவல்துறை ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், ரவுடிகளை ஒழிப்பதற்காக பல காவலர்களை நியமித்து அவர்களின் தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியும் நடந்துவருகிறது. அதேசமயம், போலீஸ் இன்ஸ்பெக்டர்களே ரவுடிகளுக்கு உடந்தையாக இருப்பதாக காவல்துறை தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இந்த சூழ்நிலையில் தான், கமிஷனர் அதிரடியாக 20 பேர் கொண்ட லிஸ்டை தயார் செய்து வைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடிய விரைவில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் இருக்கும் எனவும் போலீஸ் தரப்பில் பேசப்படுகிறது.
இது தொடர்பாக உளவுத்துறையினரிடம் விசாரித்தபோது, குற்றங்களை ஒழிக்க பலவகையான திட்டங்களை டி.ஜி.பி வகுத்தாலும், அதை கமிஷ்னர் நடைமுறைப்படித்தினாலும், ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரிகளும் சரிவர செயல்பட்டால் மட்டுமே ஒட்டுமொத்தமாக சீர் திருத்த முடியும். இல்லையென்றால் குற்றங்களை தடுப்பது கடினம் எனத் தெரிவிக்கின்றனர்.