Published on 20/03/2022 | Edited on 20/03/2022
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்றும், நாளையும் அந்தமான் நிக்கோபர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.