
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியத்தை 17 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் 319 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக உயர இருக்கிறது.
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் மார்ச் 29ஆம் தேதி ( 29.3.2025 - சனிக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.