திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு திருச்சி எஸ்பி ஜியாவுல் ஹக் ஸ்டேஷனுக்குள் ஆய்வுக்காக சென்றார்.அப்போது அங்கு இரண்டு போலீஸ் மட்டுமே இருந்துள்ளனர்.எஸ்பி திடீர் வந்ததைப் பார்த்ததும் அங்கு இருந்த இரண்டு போலீஸும் அதிர்ந்து போனார்கள்.பின்பு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் எங்கு உள்ளார் என்று விசாரித்துள்ளார்.அதற்கு இன்ஸ்பெக்டர் கேஸ் விஷயமாக சென்றதாக கூறியிருக்கிறாரகள். அங்கிருந்த ஃபைல்களை எடுத்துப் பார்த்து கேஸ் விஷயமாக யாரும் வெளியில் செல்லவில்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டார் எஸ்.பி.
பின்னர் தனது செல்போனில் ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து எங்கே போயிருக்கீங்க, என்ன செய்துட்டு இருக்கீங்க என்று தனித்தனியாக கேட்டார். அதற்கு அந்த 5 பேரும், கேஸ் விஷயமா வெளியே வந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.அதற்கு எஸ்.பி. நான் உங்க ஸ்டேஷனில்தான் இருக்கேன். கொஞ்சம் வர்றீங்களா" என்று கூப்பிட்டு உள்ளார். கொஞ்ச நேரத்தில் 5 பேரும் ஸ்டேஷன் வந்துள்ளனர். இப்படி எஸ்பி திடீர் ஆய்வுக்கு வர காரணம் என்ன என்று விசாரித்தபோது , இந்த 5 பேர் பற்றியும் ஏற்கனவே இவருக்கு நிறைய புகார்கள் போய் இருக்காம். அது உண்மையான்னு கண்டுபிடிக்கவே திடீர் விசிட் அடித்துள்ளார்.
அப்போது அவர்கள் டூட்டி நேரத்தில் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் இம்மானுவேல் ராயப்பன், எஸ்.ஐ-யாக வேலை பார்ப்பவர் அய்யப்பன். ஏட்டுகளாக இருப்பவர்கள் ராஜா, சதீஷ்குமார். ரைட்டர் விஜயராகவன். இந்த 5 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த போலீஸ் நிலையத்தின் பணிகளை கூடுதலாக கவனிக்கும்படி அருகில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.