மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து உள்ள நடிகை ஸ்ருதி, தன் மீது பண மோசடி புகார் செய்த நபர் தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்திய வீடியோக்களை தற்போது வெளியிட்டு உள்ளார். இதனால் சம்மந்தப்பட்ட நபரை திருமணம் செய்யாததாலேயே பொய் புகாரை அளித்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கோவை, சென்னை, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் வெளிநாட்டில் பணியாற்றும் மென்பொறியாளர்களை குறிவைத்து மேட்ரிமோனியல் மூலம் தொடர்புக்கொண்டு திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சுமார் ரூ.2 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரத்து 305 ரூபாய் மோசடி செய்ததாக கடலூரை சேர்ந்த நடிகை சுருதி, வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன், தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ் ஆகிய நான்கு பேரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி கோவையில் கைது செய்தனர்.
கோவையில் 4 வழக்குகளும், நாகப்பட்டிணத்தில் 2 வழக்குகளும், சென்னையில் ஒரு வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் சுருதி உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுருதி, சுருதியின் தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேசன், சகோதரர் சுபாஷ் ஆகிய நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை விசாரித்த காவல் துறை அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் தெரிவித்து இருந்தார் . இந்நிலையில் தற்போது, தன் மீது பண மோசடி புகார் தெரிவித்த அமுதன் என்ற நபர், தன்னை காதலிக்க வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டிய வீடியோவை தற்போது வெளியிட்டு உள்ளார்.
இதன் மூலம், அவரை காதிலிக்க தான் மறுத்ததால் இதுபோன்று பொய் புகாரை தன் மீது சுமத்தி உள்ளதாக சுருதி தெரிவித்து உள்ளார். எனவே தன் மீது போடப்பட்டு இருக்கும் வழக்கு திட்டமிட்ட சதி எனவும், இந்த வழக்கில் வெளிநாட்டில் இருக்கும் வங்கி கணக்கை முடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால், தன் மீது வைக்கப்பட்டு உள்ள புகார்கள் பொய் என்பதால் சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க இருப்பதாக கூறினார்.
Published on 31/07/2018 | Edited on 31/07/2018