Published on 01/08/2020 | Edited on 01/08/2020
![CBI officials interrogate Phenix's friends](http://image.nakkheeran.in/cdn/farfuture/OVScRAWAU0W42KRmFyTjwoPWIHaWgGlgucmHeyF33vY/1596288488/sites/default/files/inline-images/xcvxvxvx_4.jpg)
தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சித்திரவதை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐ விசாரணையில் உள்ளது. இது தொடர்பாக காவலர்கள் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ காவலில் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்பொழுது பென்னிக்ஸின் நண்பர்கள் நான்கு பேரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பென்னிக்ஸ் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்காக காவல் நிலையம் சென்ற மூன்று வழக்கறிஞர்களிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.