Skip to main content

காவிரி விவகாரம்: தமாகா சார்பில் உண்ணாவிரத போராட்டம்!

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
gk vas


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, திருச்சியில் ஏப்ரல் 6-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் திருச்சி உழவர் சந்தையில் இன்று காலை 9.30 மணி முதல் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது, நீதிமன்ற கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு, சட்டத்திற்கே சவால் விடும் வகையில், கர்நாடக முதல்வர் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரி பிரச்னையில் அனைத்து கட்சியினரும் ஒருமித்த கருத்தோடு போராட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி பிரச்னைக்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் தமாகா தொடர்ந்து போராடும் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்