கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவைக்கு அருகே (நவ.30) புயலாக கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது ஏற்றப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.7 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும். கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும். கடலூர் மாவட்டத்தில் நேற்று மேக மூட்டமாக காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மாவட்டத்திற்கு (நவ.30)ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை இன்று(நவ.30) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 30 பேர், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 25 பேர் தயார் நிலையில் உள்ளனர் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பேரிடர், வெள்ளம் குறித்து இதில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று (29/11/20240) இரவு 8 மணி நிலவரப்படி 'ஃபெங்கல்' புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது.