நலம் விசாரித்த முதல்வர்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிகிச்சை பெற்றுவரும் இளங்கோவனை, நவம்பர் 28 வியாழனன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகையும் உடனிருந்தார்.
வேலுமணி-நயினார் சந்திப்பு பின்னணி!
பா.ஜ.க.வுடன் எப்போதும் இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அழுத்தமாகச் சொல்லிவரும் சூழ லில், பா.ஜ.க. துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனை நெல்லையில் சந்தித்து 20 நிமிடம் எஸ்.பி.வேலுமணி பேசிய விவகாரம், அ.தி.மு.க.வில் இன்னமும் சலசலப்பை உருவாக்கி யிருக்கிறது. "அந்த நபரை எதற்கு சந்திக்கணும்? தனி ரூட் எடுக்கிறாரா?' என்று வேலுமணிக்கு எதிராக கமெண்ட் அடித்துள்ளார் எடப்பாடி. ஆனால், "மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்கத்தான் சந்தித்தேன்; அரசியல் ஏதுமில்லை' என வேலுமணி விளக்க மளித்திருக்கிறார். சந்திப்பு குறித்து விசா ரித்தபோது, "பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேலுமணி விரும்புகிறார். ஆனால், மாநில தலைவர் மாற்றப்படாத வரையில் இதற்கு எடப்பாடி சம்மதிக்க மாட்டார். தலைவராகும் முயற்சியை நீங்க எடுங்கள். டெல்லியில் பேசுங்கள், பா.ஜ.க. கூட்டணிக்கு எடப்பாடியை நாங்கள் சம்மதிக்க வைக்கிறோம் என சொல்லியிருக்கிறார். அதற்கு நயினார், "முயற்சித் துக்கொண்டுதானிருக்கேன். டெல்லியோ வேறு யோசனையில் இருக்கிறது. டெல்லியில் அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக் கிறேன். கிடைத்ததும் பேசிவிட்டுச் சொல் கிறேன்' என தெரிவித்திருக்கிறார். அத னால், திருமண அழைப்பிதழ் கொடுப்பது ஒரு சாக்காக இருந்தாலும், கூட்டணி விசயமாகவும், பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் வரவேண்டும் என்பதையும்தான் இந்த சந்திப்பில் முக்கியமாக பேசியிருக் கிறார் வேலுமணி'' என்கின்றனர்.
-கீரன்