Published on 14/06/2019 | Edited on 14/06/2019
ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் தகவல் தொடர்புக்கு இனி இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தி இருந்தது. இதுதொடர்பாக அனைத்து ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
![railway](http://image.nakkheeran.in/cdn/farfuture/i3BHrDgRqhhDdvySurixwXCJDvFH3-ro9Pjb90s9Avs/1560500611/sites/default/files/inline-images/sdsddssdsds.jpg)
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசி தகவலை பரிமாறிக்கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் திருத்தத்தை கொண்டுவந்துள்ளது தெற்கு ரயில்வே.