Skip to main content

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கோவில்களில் இந்து அமைப்புகள் போராட்டம்!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் தினமும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் முஸ்லிம்கள் ஒவ்வொரு ஜமாத் ஆக பள்ளி வாசல்களில் இரவு பகல் என தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

caa support temple kanyakumari

இந்த நிலையில் குமாி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் ஒன்று கூடி குடியுாிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு ஊாில் உள்ள இந்து கோவில்களில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (16/03/2020) சரலூர், வெள்ளடிச்சான் விளை, வட்டவிளை, மேலசரக்கல் விளை, கீழ சரக்கல் விளை உட்பட 12 ஊர்களில் உள்ள இந்து கோவில்களில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அவா்கள் பக்தி பாடல்கள் பஜனை பாடி இந்தியாவின் வரலாற்றுகளையும் குடியுரிமை சட்டத்தினால் ஏற்படும் பாதுகாப்பு அம்சங்களையும் பற்றி பாஜக தலைவா்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் வெள்ளடிச்சான் விளையில் நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவா் எம்.ஆர்.காந்தியும் வட்டவிளையில்  நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனா தேவ்  கலந்து கொண்டு பேசினார்கள். இதே போல் தொடர்ந்து தமிழகம் முமுவதும் அனைத்து ஊர் கோவில்களிலும் நடக்கும் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்