தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு.
நாமக்கல், திருப்பூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய தனி மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரியாக வி.மங்கலம் நியமனம். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பொது மேலாளராக ஆர். ஜனனி சவுந்தர்யா நியமனம். நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக மேகராஜ் நியமனம். திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியராக ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நியமனம். பதிவுத்துறை ஐ.ஜியாக ஜோதி நிர்மலாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு.
தமிழக வளர்ச்சி துறை மற்றும் தகவல் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நியமனம். பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளராக முகமது நசிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்ட ஆட்சியராக பிரவீண் நாயர் நியமினம்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக சிவன் அருள் நியமனம். அதேபோல் ராணிப்பேட்டைக்கு சிறப்பு அதிகாரியாக திவ்யதர்ஷினி நியமனம். எரிச்சக்தி துறை முதன்மை செயலாளராக பி.சந்திரமோகன் நியமனம். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனிசாமி ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குனராக நியமனம்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆசியா மரியம், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு துறை இயக்குனராக நியமனம். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக வள்ளலார் நியமனம். தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக எஸ்.நாகராஜனை நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக நடராஜனை நியமித்தது தமிழக அரசு.