Skip to main content

'பிரிட்டானியா பிஸ்கட் மட்டும் கொண்டு வாங்க'-ஒன்றைத் தலைமைக்கு திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ஐடியா

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
nn

அதிமுகவில் இரட்டை தலைமை இருந்த நேரத்தில் ஒற்றை தலைமையாக மாற்றுவதற்கு பிரிட்டானியா பிஸ்கட்டையும் ஹார்லிக்ஸ் பாட்டிலையும் வைத்து வாக்கெடுப்பு நடத்தலாம் என தான் யோசனை கொடுத்ததாக அதிமுகவின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ''அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பன்னீர்செல்வம் சொன்னார் 'திடீரென இப்படி சொன்னால் எப்படி? அதற்கு அறிவிப்பு கொடுத்து உறுப்பினர்களைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தினால் தான் தேர்ந்தெடுக்க முடியும்' என்றார்.

அதற்கு நான் சொன்னேன் ''பொதுக்குழு, செயற்குழு எல்லாம் கூட்ட வேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பெருந்தலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் இங்கே உட்கார்ந்து இருக்கிறோம். பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட்டை இரண்டு எடுத்து வைங்க, ஹார்லிக்ஸ் டப்பாவை டேபிள் மேல எடுத்து வைங்க. ஒன்னுல ஓ.பன்னீர்செல்வம் என்று போடுங்க, மற்றொன்றில் எடப்பாடி என்று போடுங்க. புடிச்சவங்க ஓட்டு போடட்டும். எண்ணி இப்பொழுதே முடித்து விடலாம் என்று சொன்னேன்'' என பேசி உள்ளார்.

சார்ந்த செய்திகள்