![BSNL employees hunger strike chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q_Wtj6gqo85sZ3oWbjuyc8pS_KDhXn4hXlp9kMN7IUo/1601536833/sites/default/files/2020-10/bsnl-4.jpg)
![BSNL employees hunger strike chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/BOGTNg7jceAH-DQ37xWcDThsfRjb04mKg-6Hv4F2Ss0/1601536833/sites/default/files/2020-10/bsnl-3.jpg)
![BSNL employees hunger strike chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/EGoprzYVMs9PUFE7yq4W4ySCeuKuQXuukPy9OVwTCNQ/1601536833/sites/default/files/2020-10/bsnl-2.jpg)
![BSNL employees hunger strike chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/PC-YVBzK3Vxrd9gYmWXX9pHhcohrSGzmcO4jo4lPNg0/1601536833/sites/default/files/2020-10/bsnl-1.jpg)
Published on 01/10/2020 | Edited on 01/10/2020
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பாக இன்று கருப்பு தினம் என்று அறிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அண்ணா சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி வளாகத்தில் இன்று காலை, பி.எஸ்.என்.எல். அனைத்து தொழிற்சங்கம் சார்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4 ஜி சேவை வழங்காதது, நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய மறுப்பது, ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காதது மற்றும் மருத்துவ சலுகைகள் நீண்ட நாட்களாக வழங்காமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 20வது அமைப்பு தினமான இன்று கருப்பு தினமாக கடைபிடிக்கிறோம் என போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.