Published on 27/02/2018 | Edited on 27/02/2018

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.

புத்தகத்தை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், நக்கீரன் ஆசிரியர் கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.