Published on 07/03/2020 | Edited on 07/03/2020
தமிழ் வார்த்தைகள் பல சமஸ்கிருதத்தில் இருந்து மருவி தோன்றியவை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசியுள்ளளார்.
திருச்சில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி பேசுகையில்,

கணினி மொழிக்கு சமஸ்கிருதம் மட்டுமே பொருந்தும். தமிழ் வார்த்தைகள் பல சம்ஸ்கிருத வார்த்தைகளில் இருந்து மருவிய வார்த்தைகளே. இந்தி ஒரு இணைப்பு மொழி, ஆனால் இந்தி சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டது என்றார்.
மேலும் பேசுகையில், ஆரியம், திராவிடம் என்று எந்தவொரு ஆதாரமும் கிடையாது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஆய்வு செய்தால் அனைவரின் டி.என்.ஏவும் ஒரே மாதிரியாக இருக்கும். தேவநாகரி மொழிதான் அனைத்துக்கும் அடிப்படை எனவும் பேசினார்.