Published on 29/01/2020 | Edited on 29/01/2020
பாஜக திருச்சி மண்டலத் துணைத் தலைவராக உள்ள விஜயரகு என்பவரை பரபரப்பான மக்கள் கூட்டம் நிறைந்த காந்திமார்கெட் பகுதியில் கடந்த (27/01/2020) அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்பவரை தீவிரமாக தேடி வந்தனர்.
![bjp party leader incident babu arrested in chennai police](http://image.nakkheeran.in/cdn/farfuture/DU_X1WSr1Eac3v3vr000__wFF90eFXu5rESev5I5Pt8/1580303380/sites/default/files/inline-images/tricy.jpg)
இந்நிலையில் தலைமைறைவாக இருந்த மிட்டாய் பாபு உட்பட இரண்டு பேரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.