புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலவகத்தில் மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-
“வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு எல்லோரையும் குழப்பியுள்ளது. கருத்துக்கணிப்பை எந்த அரசியல் கட்சியினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவே இது உண்மையான கருத்துக்கணிப்பு இல்லை எனக்கூறியுள்ளது.
கருத்து கணிப்பு மூலம் மும்பை பங்கு சந்தையில் 3 லட்சம் கோடி வணிகம் நடந்துள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிகத்தை உயர்த்த வேண்டி வெளியிடப்பட்டதை உறுதி செய்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது பாஜகவினர் அதிகாரிகளை பயன்படுத்தி முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே ஏஜெண்டுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புதுச்சேரி மற்றும் மத்தியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். அதன் கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியை அமைக்கும், ராகுல்காந்தி பிரதமராக வருவதை யாராலும் தடுக்க இயலாது.
இவ்வாறு நாராயணசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.