Skip to main content

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019
b

 

அவரவர் வாழ்க்கைப் பரபரப்பில், பறவைகள் மீது அக்கறை கொள்வதெல்லாம் அரிதிலும் அரிதாகி விட்ட காலம் இது! ஆனாலும், பறவைகளை அதன் போக்கில் வாழவிடாமல் செய்து விடுகிறது மனிதன் கண்டுபிடித்த டெக்னாலஜி என்று 2.0 போன்ற திரைப்படங்கள் சுட்டிக் காட்டுவது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில்,  பறவை ஆர்வலர்களும் இருக்கவே செய்கின்றனர். 


விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் சேத்தூர்,தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில், இப்பருவ காலத்தில்,  ஆசிய நீர்ப் பறவைகள் மற்றும் பொங்கல் பறவைகள் வந்து செல்வது வழக்கம். இப்பறவைகளைக் கணக்கெடுக்கின்ற பயிற்சி யில், கடந்த இரண்டு நாட்களாக, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள் ஈடுபட்டனர். பறவைகளை வேடிக்கை பார்ப்பது போல், இவர்களையும் அப்பகுதிமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

 

பறவைகளின் நல்வாழ்க்கையில்தான், மனித வாழ்க்கை இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்