Skip to main content

திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்; சிதம்பரத்தில் பரபரப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
beaten on DMK councilor in Chidambaram

சிதம்பரத்தில் தேசிய வாக்காளர் பேரவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான சமுதாய நல்லிணக்க தொடர்பு அமைப்பு உள்ளது. இதன் தலைவரான குரு சுப்ரமணியம் தலைமையில் 3 பேர் விளங்கியம்மன் கோயில் தெருவில் பாஜகவிற்கு ஆதரவாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நூற்றுக்கணக்கான நமது கோயில்களை இடித்தவர்களுக்கா? அல்லது இடிக்கப்பட்ட நமது பெருமை மிகுந்த கோயில்களை மீட்டு அற்புதமாய் கட்டியவர்களுக்கா? ஆட்சி பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களுக்கா? உங்கள் வாக்கு என  24 வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வீடு வீடாக சென்று  வழங்கினார்கள்.

அப்போது விளங்கி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திமுக 10-வது வார்டு உறுப்பினர் சி .கே ராஜன் என்பவர் ஏன் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் வழங்குகிறீர்கள்.  யாரிடம் அனுமதி பெற்றீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் தேசிய வாக்காளர் பேரவை நிர்வாகிகளும், திமுக வார்டு உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அவரை தாக்கியுள்ளனர்.

இதனைப் பார்த்த அருகில் இருந்த சிதம்பர நகராட்சி துப்புரவு பணியாளர் திலகவதி என்ற பெண் தடுத்தபோது அவரையும் தாக்கியுள்ளனர்.  இதனை அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு கூட்டமாக வந்தனர்.  அப்போது இவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.  இதில் காயம் அடைந்ததாக திமுக நகர்மன்ற உறுப்பினர் சி கே ராஜன், துப்புரவு பணியாளர் திலகவதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த குரு சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துண்டு பிரசுரம் வழங்கிய 3 பேரை சிதம்பரம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

beaten on DMK councilor in Chidambaram

இதனையெடுத்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருபுறம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அனுமதி இன்றி துண்டு பிரசுரம் வழங்கி மதக் கலவரத்தையும் ஏற்படுத்தியவர்களையும், விளக்கம் கேட்ட நகர்மன்ற உறுப்பினர் மற்றும் துப்புரவு பணியாளரை தாக்கிய குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு காவல்நிலையத்தில் திரண்டனர். அதேபோன்று பாஜகவினர், பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றொரு பக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  துண்டு பிரசுரங்கள் வழங்கியவர்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காவல் நிலையம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.  அப்பொழுது காவல்துறையினர் இரு  பிரிவினரையும் தடுத்து தனித்தனியே அனுப்பி வைத்தனர்.  இருப்பினும் சிதம்பரம் நகர காவல் நிலையம் உள்ள மேலரத வீதியில் பதற்றம் நிலவியது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 6-ந் தேதி சிதம்பரம் புறவழி சாலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த நிலையில் மதகலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். பாஜகவினர் அனைவரிடத்திலும் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு கேட்க உரிமை உண்டு என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.