Skip to main content

காரைக்கால் பகுதி மதுபானக்கடைகளில் பழந்திண்ணி வௌவால்கள்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

நம் நாட்டில் பெரும்பாலான பறவை இனங்கள் இயற்கை முரண், ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. எஞ்சியிருக்கும் பழந்திண்ணி வௌவால்கள் போன்ற பறவைகளையும் உணவுக்காக அழித்துவருவது வேதனையளிப்பதாக உயிரின ஆர்வலர்கள் கலக்கம் அடைகிறார்கள்.

 

 Bats in Karaikal Area Liquor Store!

 

இந்தநிலையில் காரைக்காலில் உணவுக்காக பழந்திண்ணி வௌவால்களை சுட்டு பிடித்துவந்து விற்பனை செய்தவர்களையும், அவர்களிடம் இருந்த வௌவால்களையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதே அவர்களின் வேதனைக்கு காரணம்.

பறவை இனங்களின் அழிந்து வரும் உயிரினங்களுள் ஒன்றான பழந்திண்ணி வௌவால்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு அதனை பிடிப்பதற்கும், வைத்திருப்பதற்கும் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. 

 

 Bats in Karaikal Area Liquor Store!

 

ஆனாலும் காரைக்காலில் உள்ள மதுபானக் கடைகளில்  பழந்திண்ணி வௌவால்களின் கறி வறுவல் செய்யப்பட்டு உணவாக பயன்படுத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் ஒவ்வொரு மதுபானக்கடையாக சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில், விழுதியூர் சோதனைச் சாவடியில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் 20 க்கும் மேற்பட்ட பழந்திண்ணி வௌவால்கள் இரு சக்கரவாகனத்தில் இருவர் எடுத்துவந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததோடு, இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில், சுடப்பட்டு எடுத்துவந்த  பழந்திண்ணி  வௌவால்கள் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள மதுபானக் கடைகளில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லபட்டதாக தெரியவந்துள்ளது. இனி ஒவ்வொரு மதுக்கடைகளிலும் விசாரணை தொடரும் என்கிறார்கள் வனத்துறையினர்.

 

சார்ந்த செய்திகள்