![vee](http://image.nakkheeran.in/cdn/farfuture/3D_2Opz5j8xrDzJDuJ3pMINlMTIMEa8V5tZtkeO52Fk/1533347686/sites/default/files/inline-images/vee_0.jpg)
காவிரி உரிமை கோரி அய்.பி.எல் கிரிக்கெட்டுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது தடியடி! கைது! நடவடிக்கைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம்:
’’காவிரி நீர் உரிமை கோரி தமிழ்நாடே போராட்டக் களத்தில் கனன்று கொண்டிருக்கிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் திரையுலகத்தினர், தமிழ் உணர்வாளர்கள், இளைஞர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், பல்வேறு இயக்கங்கள் எல்லாம் இந்த நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. காவிரி நீரை இழந்து நாடே துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இத்தருணத்தில் இப்படி நடப்பது இயல்பானதும்- அவசியமானதுமாகும்! இந்த உணர்வை புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.
இந்த நேரத்தில் அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கேளிக்கை தேவையில்லை. மக்கள் உணர்வைத் திசை திருப்பும் சூதாட்ட விளையாட்டை சென்னையில் நடத்தக் கூடாது என்று போராடுபவர்கள் மீது தடியடி நடத்துவதும் கைது செய்வதும் கண்டனத்துக்குரியது.
காவிரி உரிமைக்காக போராடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு இத்தகைய அணுகுமுறையைக் கடைபிடிக்கலாமா? உடனே அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.’’