அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் பேரணி நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மதுரையில் நடைபெறும் பேரணிக்கு பாஜகவினர் செல்ல முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து மதுரையில் நடைபெறும் பாஜக பேரணியில் கலந்து கொள்வதற்காக பாஜகவினர் ஒன்றுகூடினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் மண்டபத்திற்கு அருகிலேயே காலை 10 மணிக்கே மதுபான பார் ஒன்று செயல்படுவதை பாஜக நிர்வாகிகள் பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ள பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்களை அழைத்துக் கொண்டு மதுபான பாரின் உள்ளே நுழைந்தார். பாருங்கள் இதுபோன்று காலையிலேயே மது பார் இயங்கி வருவதால்தான் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுவதாக ஆவேசமாக முறையிட்டார்.