நேற்று பல்லாவரம் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் நரிக்குறவர் சமுதாயத்திற்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி காலை 11 மணியளவில் பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘நரிக்குறவர்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கு’ என்று கோரிக்கை வைத்தனர். 2011ஆம் ஆண்டு நரிக்குறவர்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்து 2013ல் பாராளமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி ஒப்புதல் வழங்கப்பட்டு தற்போது வரையிலும் சட்டம் நிறைவேற்றப்படாமலே உள்ளது.
இதனால் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தன்னுடைய குலத்தொழில் செய்யும் வழியும் இல்லாமல் தற்போது தவித்து வருகின்றனர். வருகின்ற சமுதாயமாவது தங்களைப் போன்று இல்லாமல் புது பாதையில் செல்ல இந்த அரசு வழிவகுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய ராதிகா, குறவர் இன மக்கள் நாங்கள், காலங்காலமாக கல்வி பயில சாதிசான்றிதழ் இல்லாதது காரணமாக இருந்து வருகிறது. இதனால் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கை கேள்வி குறியாகவே உள்ளது. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிலையை, இந்த அரசு நினைத்துபார்க்க வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை எங்கள் ஓட்டுக்காக வரும் இவர்கள் எங்களை காலமுழுவதும் அலைய விடுகிறார்கள். வருகின்ற தேர்தலில் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் என்றார்.