Published on 11/06/2021 | Edited on 11/06/2021

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைத் தந்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைத் தந்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜன் சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முகமது ஃபரூக் முன்பு இன்று (11/06/2021) விசாரணைக்கு வந்தது.
நாகராஜனின் மீதான விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் தர காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி முகமது ஃபரூக் நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.