
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்பொழுது ஆறுமுகசாமி ஆணையம் ஒன்பதாவது முறையாக பதவி காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் எட்டாவது விசாரணை இன்றுடன் முடியை இருக்கிற நிலையில் கடந்த வாரமே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முக்கிய கடிதம் ஒன்றை தமிழக அரசுக்கு எழுதியிருந்தது. அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள். உரிய காலத்தில் வாதம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த ஆணையம், இதனால் மேலும் மூன்று மாத காலம் அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது மேலும் மூன்று மாத கால அவகாசத்தை தமிழக அரசு கொடுத்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வரை இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து இதுவரை 154 பேரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி இருக்கிறது. இந்நிலையில் ஒன்பதாவது முறையாக விசாரணை ஆணையத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரிபிள் ஹார்டிரிக் அடித்திருக்கும் வகையில் இது உள்ளது என சுற்றுவட்டாரத்தினர் பேசுகின்றனர்.