Published on 19/04/2019 | Edited on 20/04/2019

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குபதிவு நடைடைபெற்று வந்தது. அப்போது வாக்குபதிவு மையத்தின் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சின்னமான பானையை ஒரு பிரிவினர் உடைத்துள்ளனர். இதனையடுத்து இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது மற்றொரு பிரிவினர் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் காலணி தெருவில் புகுந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து சேதப்படுத்தினர். ஒரு சில வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, காவல்துறையினர் வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.
