இந்தியாவில் படித்த வேலை தேடும் இளைஞர்கள் அனைவருக்கும் அறிய வாய்ப்பு ! மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் "Union Public Service Commission" (Indian Statistical Service Examination- "ISS") , (Indian Economic Service Examination - "IES") (CCOMBINED GEO - SCIENTIST GEOLOGIST EXAMINATION - " GEOL") உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியீட்டுள்ளது.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி : பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப்படிப்பு (B.E, B.Sc, B.Tech) ஆகும். மேலும் இணையதள வழியில் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான இணையதள முகவரி : upsconline.nic.in மற்றும் https://upsconline.nic.in/mainmenu2.php இந்த இணையதளத்திற்கு சென்று மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 20-03-2019 மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-04-2019. மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் . 100 யை இணையதள வழியில் (Debit card , Credit card , Net Banking ) செலுத்தலாம். இந்த பணிக்களுக்கான எழுத்து தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி : https://upsconline.nic.in/ சென்று அறிந்து கொள்ளலாம்.
பி .சந்தோஷ் , சேலம் .