தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் தொகுதியான போடி தொகுதியில் உள்ள பொட்டிபுரத்தில் இருக்கும் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஏற்கனவே திட்டம் தீட்டி திட்டப் பணிகளையும் மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துடன் மட்டுமல்லாமல் போராட்டத்திலும் குதித்தனர். அதோடு வைகோவும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மூலம் நியூட்ரினோ ஆய்வகம் மூலம் வரும் பாதிப்புகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்.
![approval to neutrino project in theni](http://image.nakkheeran.in/cdn/farfuture/tNTdJUN74URSCA858QnCSWt1zDSiAQnsdQV8Il9dj9U/1562867744/sites/default/files/inline-images/z56_0.jpg)
அதோடு மட்டுமல்லாமல் நியூட்ரினோ திட்டம் இப்பகுதியில் வரக்கூடாது என ஐகோர்ட்டு மூலம் இடைக்கால தடை உத்தரவும் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் மத்திய அரசு தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கபடும் என திட்டவட்டமாக கூறியதுடன் மட்டுமல்லாமல் மாநிலங்கள் அவையிலும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக பதிலளித்திருக்கிறார். அதோடு மத்திய அணுசக்தி துறையும் அந்த நியூட்ரினோ ஆய்வகம் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறது.
![approval to neutrino project in theni](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pk8GhkSHUbpVVXM5GqB0tq4U29zI4I1CFsoCaWJtJO4/1562867761/sites/default/files/inline-images/z57_0.jpg)
அதோடு இந்தியாவிலேயே முதன்முதலாக நியூட்ரினோ ஆய்வகம் தேனி மாவட்டத்தில்தான் அமைய இருக்கிறது என்று மத்திய அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. இப்படி திடீரென மீண்டும் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன் மட்டும்மல்லாமல் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.