அதிமுக உடனான கூட்டணி தொடர்வதாக பாஜக முக்கிய பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக அமைச்சர்கள் தனது கூட்டணி கட்சியான தேமுதிக விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கோரினர். ஆனால் முக்கிய கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை கோராத நிலையில் பாஜக அதிமுக கூட்டணி பற்றிய சந்தேகங்கள் கிளம்பியது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக உடனான கூட்டணி முறிந்துவிட்டது என யார் சொன்னது. கூட்டணியில்தான் இருக்கிறோம் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வானதி ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
இடைத்தேர்தல் நிலைப்பாடு பற்றி கட்சிக்குள் நேற்றே ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது. அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கூட்டணி கட்சியாக என்ன நிலைப்பாடு எடுக்கவேண்டுமோ அதை ஏற்கனவே எடுத்துவிட்டோம். தமிழகத்தில் மோடிக்கு எதிரான போரட்டங்கள் எல்லாம் இப்போது மறைய தொடங்கியுள்ளன என கூறினார்.