Skip to main content

அதிகாலையில் பனியன் கம்பெனியில் தீவிபத்து; கண்முன்னேயே எரிந்த முதலீடு 

Published on 05/04/2025 | Edited on 05/04/2025
Fire breaks out at Banyan Company in the early hours of the morning

திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்துள்ளது அய்யம்பாளையம். இங்கு தனியார் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை திடீரென பனியன் நிறுவனத்தின் குடோனுக்குள் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். விசாரணையில் தங்கவேல் என்ற நபருக்கு சொந்தமான அந்த ஆலையில் பனியன் பேப்ரிகேஷன் மற்றும் பனியன்களை பேக்கிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அங்கு நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது.

திருப்பூரில் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பொழிந்து வந்த நிலையில், பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென மின் விநியோகம் சீர்படுத்தப்பட்ட நிலையில், மின்கசிவால் விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனியன் கம்பெனியின் காவலாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்