அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2002–ஆம் ஆண்டு முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் நேரடி வகுப்பில் பயின்று, தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் மார்ச் 2023 மற்றும் அக்டோபர் 2023 என இரண்டு பருவங்களில் சிறப்பு தேர்வு எழுத புதிய இணையதள இணைப்பு தொடங்கப்பட்டது. இந்த இணைப்பை (http://www.coe.annamalaiuniversity.ac.in) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராம. கதிரேசன் தொடங்கி வைத்தார்.
மார்ச் 2023க்கான சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வரும் 26.11.2022 முதல் 24.12.2022 வரை புதிய இணையதள இணைப்பில் தங்கள் விவரங்களைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் மற்றும் அனைத்துப் புல முதல்வர்கள் இணை மற்றும் துணைத்தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், தொழில்நுட்ப அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.