வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்தியன் வங்கி அருகில், நவம்பர் 11ந்தேதி, வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு வங்கிக்குள் சென்றுயிருந்தனர். அந்த வாகனங்கள் முன்பாக நீண்ட ஒரு இளைஞர் நின்றுக்கொண்டு சில வண்டிகளை சுத்தி சுத்தி வந்து பார்த்துள்ளார்.
இதனை அங்கிருந்த கடைக்காரர்கள் மற்றும் வங்கிக்கு வெளியே நின்றுயிருந்த பொதுமக்கள் கவனித்தபடி இருந்துள்ளனர். இதனை உணராத அந்த இளைஞர் ஒரு வண்டியின் முன்பக்கத்தை பிடித்து உடைப்பது போல் செய்துள்ளார். திருடர்கள் சில டெக்னிக்கை பயன்படுத்தி ஹேண்டில் பாரை திருப்புவார்கள் அப்படி செய்வதன் மூலம் வண்டியின் லாக், அன் லாக்காவிடும்.
அப்படி செய்து வண்டியை அன் லாக் செய்தவன், ஒரு ஒயரை பிடித்து இழுத்துவிட்டு ஸ்ட்ராட் செய்ய முயன்றுள்ளான். இதனைப்பார்த்துவிட்ட அந்த வண்டியின் உரிமையாளர், அவனை பிடித்துக்கொண்டு, திருடன் திருடன் என கத்த சுத்தியிருந்தவர்கள் வந்து அவனை அடித்தனர்.
ஆம்பூர் காவல்நிலையத்துக்கு தகவல் தந்துள்ளனர். காவலர்கள் வந்து அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர், ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமத்தை சேர்ந்த ராகுல் என்பது தெரியவந்துள்ளது. அவனிடம், இதுபோல் எத்தனை வண்டி திருடியுள்ளான், அந்த வண்டிகள் என்ன செய்தான், வண்டிகளை வாங்கியது யார், யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.