Skip to main content

ஆம்பூரில் தடை உத்தரவை மீறி திறக்கப்பட்ட இரண்டு கடைகளுக்கு சீல்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கரோனா தொற்று பரவாமல் இருக்க ஆம்பூர் நகரம் முழுவதும் 100 சதவிதம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள வங்கி, கடைகள் எதுவும் இயங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 13- ஆம் தேதி முதல் ஆம்பூர் நகரம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இதனைத் தீவிரமாகக் கண்காணித்தும் வருகின்றனர்.
 

 

 

 

ambur area shops seal officers

 

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி பஜார் பகுதியில் மாவுமில்லும், வளையல்கார தெரு பகுதியில் செயல்பட்டு வந்த ஜெனரல் ஸ்டோர் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு மக்கள் கூட்டமாக வந்து நின்று இருந்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் காவல்துறை மூலமாக வருவாய்த் துறையினருக்குச் சென்றுள்ளது. உடனடியாக வருவாய்த்துறையினர் அங்குச் சென்று வந்த தகவல் உண்மையா? என ஆய்வு செய்தனர். உண்மை என தெரியவந்ததும், இதுப்பற்றி ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளிக்குத் தகவல் தந்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் தாசில்தார் செண்பகவள்ளி தலைமையில் வருவாய்த்துறையினர் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சென்று சீல் வைத்தனர்.

வாணியம்பாடி நகரமும் 144 தடை உத்தரவை 100 சதவிதம் கடைப்பிடிக்கப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கும் தீவிரக் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

 

சார்ந்த செய்திகள்