Skip to main content

கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்!

Published on 07/08/2018 | Edited on 27/08/2018


கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் போக்குவரத்து சட்டதிருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் போக்குவரத்து சட்டதிருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டனத்தை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கள் இனைந்து நடத்தும் இந்த போராட்டத்தில் கோவை சார்பில் 12 தொழிற்சங்கள் பங்குபெறுகின்றன. இதனிடையே வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஒட்டுநனர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 

 

மத்திய அரசின் போக்குவரத்து சட்டதிருத்தத்தை எதிர்த்து கோஷமிட்டனர். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "நாடு முழுவதும் வாகனம் இயக்கும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். விபத்து என்பது எதிர்பாரத விதமாக நடைபெறுவது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் விபத்து நடந்தால் நேரடியாக ஒட்டுநனர் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அபராதமும் ஒட்டுநனர்களே கட்ட நேரிடும்.

இது அவர்களின் குடும்பங்களை முற்றிலும் பாதிக்கும். மத்திய, மாநில அரசுக்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் விலை உயர்வை குறைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோகள் இயங்கவில்லை," என்றார்.

கோவை மண்டல இருசக்கர வாகன தொழிலாளர்கள் நலச்சங்கம் தொழிலாளர்களும் இதில் கலந்துகொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்