திருவாரூர் அருகே பெண்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் 1.10 லட்சம் பணம் தருவதாகவும், கருவை கலைக்க சொல்லி கருகலைப்பு மாத்திரைகள் வழங்கியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் மீதும், காதலன் மீதும் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வடகரை அருகே நம்பிபாடி கிராமத்தை சோ்ந்தவர் காசிநாதன். அவரது மகள் கார்த்திகா ( வயது 21). இவர் மாங்குடியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோகுலை( வயது 25 ) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். கோகுல் கார்திகாவை திருமணம் செய்வதாக கூறி பல இடங்களில் சுற்றியதோடு கனவன் மனைவிபோலவே வாழ்ந்துள்ளனர். அதன் மூலம் எல்லை மீறி கார்த்திகா கர்ப்பமாகினார். சில நாட்கள் கடந்து திருமணம் செய்ய கோகுலை வற்புறுத்தி உள்ளார். ஆனால் கோகுல் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
செய்வதறியாமல் தடுமாறி நின்றார் காரத்திகா. ஆனால் கோகுலுக்கு ஆதரவாக திருவாரூர் அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கார்த்திகாவையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்து கட்டபஞ்சாயத்து பேசி ரூ1.10 லட்சம் பெற்று தருவதாகவும் கோகுலை விட்டு விட வேண்டும் என்றும் கருவை கலைத்துவிடவேண்டும் என்று மிரட்டலாக கூறி முன்பணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் கருகலைப்பு மாத்திரைகளையும் வழங்கி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட கார்த்திகா மற்றும் அவரது கிராமத்து மக்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கார்த்திகா ஒன்றிய செயலாளர் வழங்கியதாக கூறிய ரூ10 ஆயிரம் பணம் மற்றும் கருகலைப்பு மாத்திரையுடன் காவல் நிலைய வாசலில் கூறியவர், "தன்னை ஏமாற்றிய காதலுடன் திருமணம் செய்துவைக்க வேண்டும், தன்னை கருகலைக்க சொன்ன அதிமுக ஒன்றிய செயலாளர் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்". என்றார்.
இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.