Skip to main content

தாலி கட்டியதும் மாப்பிள்ளையை அடித்த மணப்பெண்... தாலியை தூக்கி வீசிவிட்டு சென்றதால் பெரும் பரபரப்பு!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

நாமக்கல்லில் திருமணத்தின் போது தாலி காட்டியதும் மாப்பிள்ளையை மணமகள் கன்னத்தில் அறைந்து விட்டு தாலியை தூக்கி எறிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சார்ந்தவர் விஜி. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கும், ராசிபுரம் பகுதியை சார்ந்த கனிகா (பெயர் மட்டற்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் திருமணம்  செய்து வைக்க இரு வீட்டிலும் முடிவு செய்துள்ளனர். இதற்கான நிச்சயமும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. 

 

incident



இந்த நிலையில் அங்குள்ள சோமேஸ்வரர் கோயிலில் திருமண ஏற்பாடுகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பலர் முன்னிலையில் நடந்துள்ளது. அப்போது முகூர்த்த நேரம் நெருங்கியதால் மாப்பிள்ளை மணமகளுக்கு தாலி கட்டினார். வந்திருந்தவர்கள் எல்லாம் மணமக்களுக்கு பூ தூவி அட்சதை போட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் மணமகன் விஜி, மணமகள் நெற்றியில் பொட்டு வைக்க பெரியவர்கள் கூறினார்கள். அப்போது மாப்பிள்ளை கணிக்க நெற்றியில் பொட்டு வைக்க சென்றார். திடீரென விஜியின் கையை கல்யாண பொண்ணு தட்டிவிட்டார். இதனால் எதுவும் புரியாமல் என்னசெய்வது என்று தெரியாமல் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு மாப்பிள்ளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார் கனிகா. இதன் பிறகு அப்போது தான் கட்டி முடித்த தாலியை எடுத்து வீசியெறிந்தார். அங்கு கூடியிருந்தவர்கள், பெற்றோர்கள் என யாரை பற்றியும் கவலைப்படவில்லை.  இரு வீட்டாரும் மணப்பெண் நடவடிக்கையை பார்த்து கடுமையான அதிர்ச்சியில் உறைந்தனர். பின்பு கனிகா வேகவேகமாக கோயிலிலை விட்டு வெளியே சென்றுவிட்டார். 


இதைபார்த்த அர்ச்சகர், எல்லாரையும் வெளியேற சொல்லி விட்டு, கோயிலை பூட்டிவிட்டு புறப்பட்டு போய்விட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று இதை பற்றி புகார் அளித்துள்ளனர். அப்போதுதான் மாப்பிள்ளை வீட்டிற்கு விஷயம் தெரிந்துள்ளது. விசாரணையில் கல்யாண பெண்ணுக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது. இந்த கல்யாணத்துலயும் இஷ்டம் இல்லை என்று தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு போலீசார் இரண்டு வீட்டையும் சமாதானம் படுத்தி விட்டு அனுப்பியுள்ளனர். பின்பு  வேற ஒரு உறவுக்கார  பெண்ணை பார்த்து விஜிக்கு கல்யாணம் முடித்து வைத்தனர். இந்த சம்பவத்தால் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.