










Published on 24/12/2019 | Edited on 24/12/2019
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அன்னை பாத்திமா கருணை இல்லத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட கேக்கை முதல்வரும், துணை முதல்வரும் ஒன்றாக வெட்டி அங்கிருந்தோருக்கு ஊட்டி மகிழ்ந்தனர். தோடந்து பரிசுகளை பரிமாரிக்கொண்டனர். பின்னர் கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களுடன் அமர்ந்து விருந்து உண்டனர்.