![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/DrNBDohaNGqH2eTkN8rl_HI61p0ARufH3iNr67oANsc/1601875036/sites/default/files/inline-images/9076.jpg)
கடந்த ஒரு மாதமாகவே அதிமுகவில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து அதிமுகவில் இதுதொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனை அடுத்த சில நாட்களாக அமைதியாக இருந்த இந்த பிரச்சனை கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் காரசாரமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியது.
இதனையடுத்து இதுதொடர்பான விவரங்களை பேசி தீர்ப்பதற்காகக செயற்குழு கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்லவத்தை அமைச்சர்கள் மாற்றி மாற்றி சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் 6ம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சென்னை வர அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்திருந்ததாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், ஓபிஎஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடப்பு அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என்று தெரிவித்துள்ளார்.