![actor rajini kanth admitted at apollo hospital in hyderabad](http://image.nakkheeran.in/cdn/farfuture/eNZ4MbUbhQDVTuaqNrqw4NwSy5JtEBJzwRfJfyNh5Wk/1608884476/sites/default/files/inline-images/rajini3455.jpg)
ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடிகர் ரஜினிகாந்த் இன்று (25/12/2020) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவருடன் படப்பிடிப்பில் இருந்த சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 22- ஆம் தேதி ரஜினிகாந்திற்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா இல்லை (நெகட்டிவ்) என முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு ரத்த ஓட்டம், இதய துடிப்பு சீராக இருக்கிறது. ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் ரஜினிகாந்த் இருப்பார். மேலும், அவருக்கு கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ரஜினியின் ரத்த அழுத்தம் சீரானவுடன் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.