Published on 15/09/2020 | Edited on 15/09/2020
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ப்ளோரன்ட் பெரேரா இன்று காலமானார்.
விஜய்யின் புதிய கீதை படத்தில் அறிமுகமானவர் ப்ளோரன்ட் பெரேரா (வயது 67). இவர் கரோனா காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ப்ளோரன்ட் பெரேரா கும்கி, தொடரி, கயல், பொதுவாக எம்மனசு தங்கம் உட்பட கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் நிர்வாக பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.