Skip to main content

சிலம்பம்; சிறு குழந்தைகளின் சாதனை...!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 The achievement of small children ...!

 

ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் புத்தாஸ் சிலம்பாட்ட டிரஸ்ட் இணைந்து ஈரோட்டில் 23ந் தேதி நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியது. அதில், 10 வயது பிரிவில் திக்‌ஷாசக்தி என்ற ஐந்தாம் வகுப்பு மாணவியும், 7வயது பிரிவில் சிவிக்‌ஷாசக்தி மாணவியும் பங்கேற்று ஒற்றைகம்பு சிலம்பமும், நுன்ஜாக்கும் இடைவிடாது சுழற்றினார்கள். 

 

மாணவி சிவிக்‌ஷாசக்தி, 1 மணி நேரம் 5 நிமிடம் 6 விநாடியும், திக்‌ஷா சக்தி 1 மணி நேரம் 20 நிமிடம் 3 விநாடியும் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து நோபால் உலக சாதனையின் முதன்மை அலுவலர், மாநில நடுவர் துரைராஜ் ஆகியோர் மாணவிகளை பாராட்டி நோபல் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கினார். 


இந்நிகழ்ச்சிக்கு, சிலம்பாட்ட கழக தலைவர் யூ.ஆர்.சி.தேவராஜ் தலைமை தாங்கினார். அக்னி ஸ்டீல் இயக்குநர்கள் சின்னச்சாமி, தங்கவேல், ராஜாமணி சின்னச்சாமி, மாணவிகளின் பெற்றோர் சக்தி கணேஷ், தீபா, கிரின் பில்ட் இயக்குநர் பாலு, பிரியா, டிப்ஸ் பள்ளி இயக்குநர் சிவகுமார் வி.வி நேஷனல் இயக்குநர் செந்தில் முருகன், மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளரும், மாணவிகளின் பயிற்சியாளருமான கந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்