Skip to main content

சிறுமியிடம் பாலியல் சீண்டல்; 83 வயது முதியவர் மீது பாய்ந்தது போக்சோ!

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

83 age old man arrested under pocso in salem

 

சேலத்தில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட 83 வயது முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

 

சேலம் கோட்டையைச் சேர்ந்தவர் ரங்கசாமி (83). வேளாண்மைத் துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் 11 வயது சிறுமி தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், தனது வீட்டில் வளர்த்து வரும் பூனை, குட்டி போட்டுள்ளதாகவும், அந்தக் குட்டியை சிறுமிக்குப் பிடித்துக் கொடுப்பதாகவும் கூறி சிறுமிக்கு ஆசை காட்டி அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். 

 

அந்தச் சிறுமியுடன் வந்த உறவுக்கார சிறுமி, வீட்டுக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தாள். அங்கே ரங்கசாமி, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவள், முதியவரை பிடித்து தள்ளிவிட்டு விட்டு சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள். 

 

இதுகுறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் பழனியம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நான் கடவுள்' - மயானமான ஆன்மீக சொற்பொழிவு மைதானம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க பல்லாயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

அண்மைய தகவலாக ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நெரிசலில் சிக்கி இறந்தவர்களில் அதிகப்படியானோர் பெண்கள், குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. சொற்பொழிவு நடத்தப்பட்ட இடம் மயானம் போல் காட்சியளிக்கிறது. 80 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்க முயன்றுள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். சொற்பொழிவு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில்தான் போலெ பாபா அண்மையில் குடியேறி வசித்து வந்துள்ளார்.

'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

போலெ பாபா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. போலீஸ் அதிகாரியாக இருந்து பின்னர் சாமியாராக மாறிய போலெ பாபா ஏற்கனவே கொரோனா காலத்தில் அரசு நிறைய தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்த பொழுதும் கூட 50,000 பேரை சொற்பொழிவிற்காக வாங்க என அழைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில இந்து கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு 'நான் அவருடைய வழித்தோன்றல்; அவருடைய மறுபிறவி என்னிடம் வந்து தகவலை கேட்டு ஆசிபெற்றுக் கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும்' என்று சொல்லி தான் மக்களை சொற்பொழிவு கூட்டத்திற்கு சேர்த்துள்ளார் போலெ பாபா. ஆனால் தற்பொழுது வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய நபரான போலெ பாபா மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபுறம் போலே பாபா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள போலெ பாபாவை தேடிவருகிறோம் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்; குடியாத்தத்தில் ஒருவர் கைது

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
man was arrested for smuggling cannabis near  Tamil Nadu Andhra border

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான சைனகுண்டா சோதனை சாவடியில் குடியாத்தம் கிராமிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும் இவர் குடியாத்தம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வேல்குமார் என்பதும் (வயது 23) இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து குடியாத்தம் பகுதியில் விற்பனை செய்வதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.