Published on 31/07/2019 | Edited on 31/07/2019
8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இந்த தடைக்கு இடைக்கால தடை விதிக்ககோருவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த எட்டு வழிச்சாலை வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.

இந்த விசாரணையில் எட்டு வழிச்சாலை தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைதுறை தனது நிலைப்பாட்டை இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு இடைக்காலத் தடை விதிப்பது பற்றியும் உச்சநீதிமன்றம் இன்று முடிவு செய்ய இருக்கிறது. எட்டு வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் இன்று நடைபெறும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.