Published on 26/05/2021 | Edited on 26/05/2021
![53 lakh stolen for changing ATM card](http://image.nakkheeran.in/cdn/farfuture/JDz9AZFVJtzSZx-s3WU_ZYoAKnueldCYgfpBCMXoXek/1622035859/sites/default/files/inline-images/atm1_1.jpg)
சென்னையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அன்பரசு. இவரிடம் ஏடிஎம் கார்டை புதுப்பித்துத் தருவதாகக் கூறி ஏமாற்றி அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் திருடியுள்ளார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரை ஏமாற்றி வங்கி பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.